நடிகர் சிம்பு மாநாடு திரைப்படம் மூலமாக மிகப்பெரிய கம்பேக் கொடுத்ததுடன் பிஸியாக நடித்து வருகிறார். சூட்டிங்கிற்கு சரியாக வர மாட்டார், முறையாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து துவம்சம் செய்யும் விதமாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மாநாடு படத்தின் வெற்றி விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவுக்கு, அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்றால், அவர் எந்தளவுக்கு பிஸியாகிவிட்டார் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
ALSO READ | மகா திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
தற்போது கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் வேகமாக நடைபெற்று வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தைப் போல் இந்தப் படமும் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என தயாரிப்பாளர் வேல்ஸ் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். மேலும், 5 கதாப்பாத்திரங்களில் சிம்பு நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது ‘பத்து தல’ படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்துள்ளனர்.
இதனால், ரசிகர்கள் அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்புவின் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து இசையமைப்பது, சிம்பு ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR