அமேசான் பிரைம் இல் நேரடியாக வெளியாகும் Silence: டிரெய்லர் வெளியீடு

மாதவன், அனுஷ்கா, ஷாலினி பாண்டே மற்றும் அஞ்சலி நடித்துள்ள சைலன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Sep 21, 2020, 05:03 PM IST
அமேசான் பிரைம் இல் நேரடியாக வெளியாகும் Silence: டிரெய்லர் வெளியீடு title=

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன் (Madhavan), அனுஷ்கா (Anushka), அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் சைலன்ஸ் (Silence). தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் மைக்கேல் மேட்சன் (Michael Madsen) இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்  கொரோனா தொற்று நோய் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பத்து இருந்தது. 

ALSO READ | மாதவனும், அனுஷ்கா ஷெட்டியும் நடித்த 'நிசப்தம்' Amazon Prime Videoவில்...

கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் (Amazon Prime Video) ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி நேரடியாக வெளியாகிறது. ஏற்கனவே சைலன்ஸ் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது தற்போது  இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

அந்த டிரெய்லரில் அனுஷ்கா மாதவனை மகிழ்ச்சியான மனநிலையில் சந்திப்பதைக் கொண்டுள்ளது, ஆனால் யாராவது காணாமல் போகும்போது நிலைமை தீவிரமடைகிறது, ஒரு பேய் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | அனுஷ்காவின் ‘நிசப்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

Trending News