ரசிகர்கள் ஷாக்; பெண் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை

பிரபல தமிழ் நடிகை தனக்கு குழந்தை பிறந்ததை ஒரு வருடம் கழித்து அறிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2021, 01:11 PM IST
ரசிகர்கள் ஷாக்; பெண் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை title=

தமிழில் உனக்கு 20 எனக்கு 18  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா. இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார் (Shriya Saran). பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2007 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். இது தவிர இவர் தனுஷுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகள்’ விக்ரமுடன் ’கந்தசாமி’ உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ALSO READ | "நரகாசூரன்" படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; OTT தளத்தில் படம் வெளியாகிறது!

கடந்த 2017 ஆம் ஆண்டு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் கடைசியாக தமிழில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போஸ்ட் செய்து கொண்டிருப்பார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் புதிய  பகிர்ந்துள்ளார். மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், தற்போது குழந்தைக்கு ஒருவயது ஆகுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அவர் ஒரு சிறிய வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

 

ALSO READ | செம்ம ரொமான்டிக்.....கணவருடன் லிப்லாக்...வைரலாகும் Shriya Saran இன் போட்டோஸ்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News