ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தாதீர்கள்- அஜித்துக்கு ஆர்.கே. செல்வமணி கோரிக்கை

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதை அஜித் நிறுத்த வேண்டும் என தென்னிந்திய திரைப்பட  தொழிலாளர்கள்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 3, 2022, 03:17 PM IST
  • ஹைதராபாத்தில் நடக்கும் ஏகே 61 ஷூட்டிங்
  • அஜித்திற்கு செல்வமணி கோரிக்கை
  • ஆர்.கே. செல்வமணி செய்தியாளர் சந்திப்பு
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தாதீர்கள்- அஜித்துக்கு ஆர்.கே. செல்வமணி கோரிக்கை title=

நடிகர் அஜித்குமார் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்துவது வழக்கம். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கூட அங்குதான் நடந்துவருகிறது. தொடர்ந்து ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடத்துவதால் தமிழகத்தை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் அஜித்குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால் தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | நடிகை மஞ்சு வாரியர் கடத்தலா?! - நடந்தது என்ன? பரபரக்கும் சினிமா உலகம்!

தல 61 படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டுமென  நடிகர் அஜித்குமார்,இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூருக்கு கோரிக்கை வைக்கிறோம்.ஏற்கனவே இதுதொடர்பாக நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த்திடம் கோரிக்கை வைத்தபோது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

Ajith

தமிழ்நாட்டிலேயே செட் போடுவதற்காக உரிய இட வசதி உள்ளது. படத்தின் கதைக்கு தேவை என்றால் சில படங்களுக்கு வெளியில் சென்று படப்பிடிப்பு நடத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் ஹைதராபாத்துக்கு சென்று தமிழ்நாட்டின் ஊர்களை செட் போட்டு படமாக்குவது ஏற்புடையதல்ல” என்றார்.

மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன். படம் எப்படி இருக்கு? விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News