தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் வரும் 25-ந் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார்.
முன்னதாக, இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நடிகர் ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கபட்டது. 51வது தாதா சாஹேப் பால்கே விருதைப் பெறும் பெருமையைப் பெறுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பு கொடுத்த 50 பிரபலங்களுக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இப்போது 51வது விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுகிறது.
தாதா சகோப் பால்கே விருது
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது (Dadasaheb Phalke Award). தங்கத் தாமரை பதக்கமும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட விருதை பெறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் திரையுலகில், நடிகர் சிவாஜிகணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் விருது பெற்ற சாதனையாளர்கள். இந்தப் பட்டியலில் இணைகிறார் சூப்பர் ஸ்டார்.
Also Read | நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படும் விருது தாதா சாஹேப் பால்கே விருது. இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து, தயாரித்து இயக்கியவர் தாதா சாஹேப் பால்கே.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மிகப் பெரும் பங்களித்தவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்திய அரசு 1969ஆம் ஆண்டில் தாதா சாஹ்ப்பின் பெயரில் இந்த விருதை அறிமுகப்படுத்தியது. இந்திய சினிமாவின் முதல் பெண் என்று கருதப்படும் தேவிகா ராணி தான் இந்த விருதை முதன்முறையாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கருப்பு உடை, காந்தக் கண்களுடன் கவர்ந்திழுக்கும் சன்னி லியோன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR