ரசிகர்களின் கேள்விக்கு ரஜினி பதில்?!

Last Updated : Jun 3, 2016, 01:31 PM IST
ரசிகர்களின் கேள்விக்கு ரஜினி பதில்?! title=

ராஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள "கபாலி" ஜுலை 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த மாதம் ஜுன் 9-ம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது கபாலியின் பாடல்கள் வெளியீட்டை ஜுலை 12-ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.

கபாலி இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போல் ஒரு நிகழ்ச்சி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் ரஜினி அவர்கள் தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் இதைக்குறித்து விவாதிக்கப்படும் . அதன்பிறகுதான் அதிகாரப்பூர்வமான  தகவல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Trending News