மலையாள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது புலிமடா படத்தின் ட்ரைலர்!

Pulimada Official Trailer: ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான 'புலிமடா' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2023, 07:05 AM IST
  • புலிமடா படத்தின் த்ரில்லர் வெளியாகி உள்ளது.
  • ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்.
மலையாள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது புலிமடா படத்தின் ட்ரைலர்!  title=

ஏ.கே.சாஜன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புலிமாடா படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.  ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனை பற்றிய கதைதான் புலிமடா. படத்தின் ட்ரெய்லரில் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.  ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பு திறமையை புலிமடா படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று தெரிகிறது.  இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  ஏற்கனவே புலிமடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்திய படமாக வெளிவரவிருக்கும் புலிமடாவில் ஜோஜூவின் கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லிஜோமோல் நடிக்கின்றனர்.  "Scent of a woman" என்பது படத்தின் டேக் லைன் ஆக உள்ளது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தை எழுதி, இயக்கி மற்றும் எடிட் செய்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி படத்தையும் ஐன்ஸ்டீன் மீடியா தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இரட்டா படத்திற்கு பிறகு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகும் படம் புலிமடா ஆகும். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வெறும் 60 நாட்களில் ஒரே ஷெட்யூலில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு படமாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் புலிமடா ஆகும்.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு புலிமாட படத்தில் லிஜோமோளும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா போன்றோர் நடிக்கின்றனர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருக்கும் வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) திருமண நிகழ்வில் நடக்கும் நிகழ்வுகளும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை சுற்றி புலிமடா படம் நகர்கிறது.  படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் பல சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு வழங்க உள்ளார் இயக்குனர் ஏ.கே.சாஜன்.

புலிமடா படத்திற்கு இஷான் தேவ் இசையமைக்க, ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் பாடல் வரிகள் எழுதி உள்ளனர். பின்னணி இசை அனில் ஜான்சன் அமைக்க, இயக்குனர் ஏ.கே.சாஜன் படத்திற்கு எடிட்யும் செய்துள்ளார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக வினேஷ் வங்காளன், கலை ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை ஷாஜி புல்பள்ளி, ஆடை வடிவமைப்பு சுனில் ரஹ்மான் மற்றும் ஸ்டெஃபி சேவியர், தலைமை இணை இயக்குனர் - ஹரிஷ் தெக்கேபட், விளம்பரம் தனய் சூர்யா (trendy tolly), ஸ்டில்ஸ் அனூப் சாக்கோ, வடிவமைப்புகள் மற்றும் மார்க்கெட்டிங் ஒப்ஸ்குரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஓல்ட்மங்க்ஸ், விநியோகம் ஆன் மெகா மீடியா ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

மேலும் படிக்க | ‘லியோ’ படம் எப்படியிருக்கு…? வெளியானது முதல் விமர்சனம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News