தனுஷுடன் இணையும் ப்ரியங்கா... எந்தப் படத்தில் தெரியுமா?

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தில் ப்ரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 26, 2022, 09:39 PM IST
  • தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படம்
  • தனுஷுக்கு ஜோடியாகிறார் ப்ரியங்கா மோகன்?
 தனுஷுடன் இணையும் ப்ரியங்கா... எந்தப் படத்தில் தெரியுமா? title=

சாணிக்காயிதம், ராக்கி படங்கள் மூலம் கவனம்  ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவரது திரைமொழிக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

அவர் தற்போது தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Dhanush

கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. அதேபோல் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில்தான் இதன் ட்ரெய்லர் வெளியானது.

 

தனது முந்தைய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் உடனடியாக கம்பேக் கொடுக்க வேண்டுமென்பதில் தனுஷ் திவீரமாக இருக்கிறார். மேலும் திருச்சிற்றம்பலம் படமும், தி கிரே மேன் படமும் நிச்சயம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என அவர் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக நடிக்கவிருப்பதால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Dhanush

இந்நிலையில் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தில் ப்ரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | முதல் வெளிச்சம் - சாப்ளினும், மனோரமாவும்.!

முன்னதாக ப்ரியங்கா மோகன் நடித்த டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘விஜய்- 66’: கேட்காமலேயே அப்டேட் விட்டு அசத்திய படக்குழு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News