மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் உருவாகவுள்ள மரக்கார்: அரபிக்கடலின்டி சிம்ஹம் என்னும் படத்தில் அவரது மகன் பிரனவ் மோகன்லால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரபல இயக்குனர் பிரியதர்சன் இயக்கவுள்ள இப்படத்தில், மோகன் லாலின் இளைமை பருவ காட்சிகளில் நடிப்பதற்காக அவரது மகன் பிரனவ் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் பிரயதர்ஷன் தனது முகப்புத்தகத்தில் இந்த செய்திகுறித்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இப்படத்தில் தமிழ் நடிகர் பிரபுவும் நடிக்கவுளதாக தெரிவிக்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1996-ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் சிறைச்சாலை திரைப்படம் வெளியானது. இதற்கு பின் இந்த படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
`ஒடியன்', `காயங்குளம் கொச்சுன்னி' படஞ்களுக்குப் பிறகு மோகன் லால் தற்போது `லூசிஃபர்' என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பரபரப்பில் இருக்கும் மோகன் லால், இந்த வேலைகள் முடிந்த பின்னர் `லூசிஃபர்' பட வேலைகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பின்னர் பிரபுவுடன் இணைந்து மரக்கார்: அரபிக்கடலின்டி சிம்ஹம் படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள இத்திரைப்படமானது வரலாற்றுத் திரைப்படமாக உறுவாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.