ஓரிரு நாளில் சி3 ரூ 100 கோடி கிளப்பில் இணையும்

Last Updated : Feb 12, 2017, 01:39 PM IST
ஓரிரு நாளில் சி3 ரூ 100 கோடி கிளப்பில் இணையும் title=

சி3 ரூ 100 கோடி கிளப்பில் இணைய போகிறது.  

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வந்த சூர்யாவுக்கு சி3 கை கொடுத்திருக்கிறது.

தமிழகத்தின் அடுத்தடுத்து நிலவி வரும் பிரச்சனைகளுக்கு இடையில். சி3 படத்தின் வசூல் நாளுக்கு நாள் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தி வருகின்றது, இப்படம் முதல் இரண்டு நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ 45 கோடி வசூல் செய்திருந்தது. 3_வது நாளான நேற்று மட்டுமே ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் 3 நாட்களில் சி3 ரூ 65 கோடி வசூல் செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படியும் நாளைக்குள் ரூ 100 கோடி கிளப்பில் சி3 இணைந்துவிடும் என்று தெரிகின்றது.

Trending News