46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம்!

Yezhu Kadal Yezhu Malai: ரோட்டர்டாமை தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் நுழைந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 14, 2024, 11:12 AM IST
  • விரைவில் வெளியாக உள்ள ஏழு கடல் ஏழு மலை.
  • நிறைய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
  • நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம்! title=

மனதை நெகிழ வைக்கும் உணர்வுப்பூர்வமான படங்களை கொடுக்கக்கூடிய இயக்குநர் ராம் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அதேசமயம்  தரமான கலைப்படைப்புகளை ரசிகர்களுக்கு பரிசளித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின்பாலி கதாநாயகனாக, அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இன்னொரு பக்கம்  உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகமும் உற்சாகமுமாக துவங்கியுள்ளது. 

மேலும் படிக்க | விஜய் கட்டிய கோயிலில் ராகவா லாரன்ஸ்! வைரல் வீடியோ

அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிக் ஸ்கிரீன் போட்டி பிரிவில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பையும் முத்திரையையும் பதித்தது. தற்போது ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெற உள்ள 46வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் ‘பிளாக் பஸ்டர்ஸ் ஃப்ரம் அரௌண்ட் தி வேர்ல்ட்’ (Blockbusters from around the world) என்கிற பிரிவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “சமகால சினிமாவில் சிறந்த உலக திரைப்படங்களின் வரிசையில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகி இருப்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்பிற்குமான சான்றாகும். 'ஏழு கடல் ஏழு மலை', அதன் அழுத்தமான திரைக்கதை மற்றும் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளது.  

நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் அசாதரணமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், உமேஷ் யாதவ்வின் கலை வடிவமைப்பும், ஸ்டண்ட் சில்வாவின் சண்டை காட்சிகளும், மதன் கார்க்கியின் பாடல் வரிகளும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழ் புத்தாண்டில் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தளபதி 69-ல் 3 நாயகிகள்?! ஒன்று த்ரிஷா, இன்னொன்று சமந்தா 3வது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News