சமந்தாவை அப்படியே காபி அடித்த சோபிதா!! அவர் செய்த செயலை பாருங்கள்..

Netizens Compare Sobhita Dhulipala With Samantha : நடிகர் நாக சைதன்யாவிற்கும், சோபிதா துலிபலாவிற்கும், சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், சமந்தாவை அப்படியே அவர் காபி அடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2024, 10:40 AM IST
  • நடிகை சமந்தாவை காபி அடித்த சோபிதா!
  • எந்த விஷயத்தில்?
  • இங்க படிங்க..
சமந்தாவை அப்படியே காபி அடித்த சோபிதா!! அவர் செய்த செயலை பாருங்கள்.. title=

Netizens Compare Sobhita Dhulipala With Samantha : தென்னிந்திய திரை உலகில் கடந்த சில நாட்களாக வைரலாக இருக்கும் பெயர்கள், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபலா. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கின்றனர். 

நாக சைதன்யா விவாகரத்து: 

2017 ஆம் ஆண்டில் நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, பின்னர் தடுமாறு தொடங்கியது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு இருவரும் திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இந்த திருமண விவாகரத்துக்கான காரணம் குறித்து அவர்கள் இதுவரை எங்குமே வெளியில் பேசவில்லை. 

சிங்கிள் சமந்தா.. ஜோடியான நாக சைதன்யா..

திருமண விவாகரத்திற்கு பிறகு, நடிகர் சமந்தாவிற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் வந்தது. அதை சமாளித்தும் பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து இருக்கும் அவர், டேட்டிங்-மீட்டிங்கிலிருந்தும் பிரேக் எடுத்து சிங்கிளாக உலா வந்து கொண்டிருக்கிறார். 

ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, விவாகரத்திற்கு பின்பு உடனடியாக சோபிதாவை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகள் காதலர்களாக இருந்த பிறகு இருவரும் கணவன் மனைவியை ஆகிருக்கின்றனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து சமந்தாவின் ரசிகர்கள் பலர், அவரது திருமணத்தின் போது எடுத்த திருமண வீடியோக்களை எடுத்து எடிட் செய்து பதிவிட்டு வந்தனர். 

Samantha

சமந்தாவை காப்பி அடித்த சோபிதா? 

சமந்தா ரசிகர்கள் பலர், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் விவாகரத்து ஆனதற்கு காரணம், சோபிதாதான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவரது முகத்தை வைத்தும், நடித்த படங்களை வைத்தும் அவரை கலாய்ப்பதை வாடிக்கையாக்க கொண்டுள்ளனர். அந்த வகையில் புதிதாக ஒரு விஷயத்தையும் கிளப்பி விட்டு இருக்கின்றனர். 

சமந்தா, தனது திருமணத்தின் போது தலையில் நெற்றி சுட்டி, கழுத்திலும் காதிலும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்திருந்தார். இதே போல சோபிதாகும் தனது திருமண நாளில், ஆபரணங்களை அணிந்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இரண்டு நகைகளும் பார்க்க ஒரே மாதிரி இருப்பதாக சிலர் இணையத்தில் சந்தேகங்களை தெரிவிக்க, இன்னும் சிலர் ஆபரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் டிசைன் வேறு மாதிரியாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். 

ஏற்கனவே, சமந்தா நாச சைதன்யாவிற்கு ப்ரப்போஸ் செய்த நாளில், சோபிதா தனது நிச்சயதார்த்தத்தையும் நடத்தியது ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது. இப்போது, சமந்தாவிற்கு போட்டியாக அதே போல நகைகளையும் அவர் போட்டுள்ளது குறித்து தற்போது அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். 

மேலும் படிக்க | நாக சைதன்யா சோபிதா திருமணம் : சமந்தா போட்ட பதிவு என்னத் தெரியுமா ?

மேலும் படிக்க | தாலி கட்டிய நாக சைதன்யா..மேடையில் எமோஷனல் ஆன சோபிதா! வைரல் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News