மணிரத்னம் படத்தில் இருந்து பிரபல முன்னணி ஹீரோ விலகல்!!

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் இருந்து மலையாள நடிகர் பகத் பாசில் விலகியுள்ளதாக தகவல்

Last Updated : Feb 4, 2018, 06:19 AM IST
மணிரத்னம் படத்தில் இருந்து பிரபல முன்னணி ஹீரோ விலகல்!! title=

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, மலையாள நடிகர் பகத் பாசில், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வரியா ராஜேஷ் என பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கிஸ், லைக்கா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றது.

படத்திற்கான தலைப்பு இன்னும் வைக்கவில்லை. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழு கூறுயிருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே மலையாள நடிகர் பகத் பாசில் விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இது பற்றிய படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், தனது இயல்பான நடிப்பை வெளிப்டுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News