மாரி 2 படத்தின் செகண்ட் சிங்கிள் "மாரி கெத்து" வெளியானது

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2018, 02:39 PM IST
மாரி 2 படத்தின் செகண்ட் சிங்கிள் "மாரி கெத்து" வெளியானது title=

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக மாரி-2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு தனுஷ்-க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 21-ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மாரி 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் "மாரி கெத்து" வெளியிடப்பட்டது.

 

Trending News