இந்த வாரம் எத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸாகின்றன? முழு லிஸ்ட் இதோ..!

OTT Releases on June 30: இந்த மாத இறுதியில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என பலமொழி படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. அவை என்னென்ன படங்கள்? அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்? இதோ முழு விவரம்..!  

Written by - Yuvashree | Last Updated : Jun 28, 2023, 12:48 PM IST
  • இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள்.
  • ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எல்லா படங்களிலின் லிஸ்ட்.
  • எந்த படத்தை, எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
இந்த வாரம் எத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸாகின்றன? முழு லிஸ்ட் இதோ..! title=

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் போல பல ஓடிடி தளங்கள் வளர ஆரம்பித்துவிட்டன. திரையரங்கில் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே ஒரு சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதும் தொடர்கிறது. இந்த மாதத்தின் இறுதி நாளான ஜூன் 30 அன்று பல படங்கள் வெளியாகின்றனர். அதில் சில தமிழ்படங்களும் அடங்கும். சரி..அந்த படங்களை எப்படி எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. 

வீரன்:

ஹிப் ஹாப் தமிழா அதி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி குழந்தைகளின் வரவேற்பினை பெற்ற படம், வீரன். தனது வழக்கமான நடிப்பில் இருந்து ஆதி இதில் கொஞ்சம் வித்தியாசமாக நடித்திருந்தார் என கூறப்பட்டது. இந்த படம், அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த மாத இறுதியில் வெளியாகிறது. இதை உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்த்து மகிழலாம். 

மேலும் படிக்க | “நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?

குட்நைட்:

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் கவனம் ஈர்க்கும் நடிகராக இருப்பவர், மணிகண்டன். இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம், குட்நைட். குறட்டை பிரச்சனையுடன் போராடும் ஒரு இளைஞன் தனது காதலையும் வாழ்க்கையும் எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. இதில், ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். முதல் நீ முடிவும் நீ படத்தின் நாயகி நீதா ரகுநாத் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. 

குலசாமி:

விமல் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம், குலசாமி. இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பாலியல் வன்முறை, சட்ட ஒழுங்கு என பல பிரச்சனைகள் அலசப்பட்டிருக்கும். இப்படம், டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில், ஜூன் 30ஆம் தேதியன்று வெளியாகிறது. 

விமானம்:

விமானத்தில் பறக்க வேண்டும் என ஆசைப்படும் தனது குழந்தையின் கனவை நிறைவேற்ற ஒரு அப்பா எடுக்கும் முயற்சிகள்தான் விமானம் படத்தின் கதை. இதில், சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மூலம் தமிழில் கம்-பேக் கொடுக்கிறார். இந்த படம், ஜீ 5 தளத்தில் நாளை மறுநாள் (ஜூன் 30) வெளியாகவுள்ளது. 

தி நைட் மேனேஜர்:

சோபிதா துலிபலா, அனில் கபூர்,  ஆதித்தா ராய் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தொடர், தி நைட் மேனேஜர். இந்த தொடரின் முதல் பாகம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி செம ரெஸ்பான்ஸ் பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் அதே தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை, வரும் 30 ஆம் தேதி முதல் காணலாம்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2:

தமன்னா, விஜய் வர்மா, மிருணாள் தாகூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் லஸ்ட் ஸ்டோரீஸ் 2. இந்த படத்தில் காமம் பற்றியும் காதல் பற்றியும் அதிகம் பேசப்படும். படத்தின் மைய்யக்கருவே அதுதான். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படம், நாளை (ஜூன் 29) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

பிற படங்கள்:

மேற்கூறிய படங்கள்-தொடர்களை போல பல படைப்புகள் இந்த மாத இறுதியில் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்ட்..

-சார்ஜண்ட்-இந்தி-ஜியோ சினிமா
-அஃப்வாஹ்-இந்தி-நெட்ஃப்ளிக்ஸ்
-லகாத்பகா-இந்தி-ஜீ 5
-ஷான்யா-இந்தி-ஷெமாரூ மீ
-நின்னு ஷேரே தருணம்-தெலுங்கு-ஆஹா தளம்
-ஃபாஸ்ட் X -ஆங்கிலம்-பி.எம்.எஸ்
-ரன் ராபிட் ரன்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
-நிமானோ-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
-டெலீட்-நெட்ஃப்ளிக்ஸ்
-செலிப்ரிட்டி-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ்

மேலும் படிக்க | Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பம்? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News