லியோ படக்குழு நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லையா? இதோ உண்மை நிலவரம்!

Leo Movie: லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடனமாடிய கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2023, 07:24 AM IST
  • லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது.
  • விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.
  • அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
லியோ படக்குழு நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லையா? இதோ உண்மை நிலவரம்! title=

லியோ படத்தில் நான் ரெடி தான் வரவா பாடலில் நடனமாடிய நடன கலைஞர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை என்று சிலர் சென்னையில் உள்ள லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்கிரீன் நிறுவனத்திற்கு சென்று முற்றுகையிட்டனர்.  இந்த செய்தி சினிமா வட்டாரங்களிலும், பொது மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியது.  இந்நிலையில், லியோ தயாரிப்பு நிறுவனம் இதனை மறுத்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறியது. இந்நிலையில், பெப்சி சங்க தலைவர் ஆர்கே. செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், அனைத்து நடன கலைஞர்களுக்கும் பேசியபடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

ஆர்கே.செல்வமணியின் அறிக்கையில், இன்று சில கானொலிகளில் “லியோ” திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம்.  "லியோ" திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் திரு.லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் திரு.தினேஷ் மாஸ்டர் அவர்கள் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். 

இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட 1,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.  இந்த “லியோ” திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள "ஆதி ஸ்ரீராம்" ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.  தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் உருவாகி உள்ள புதிய சிக்கல்! குழப்பத்தில் திரையரங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News