மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?

Maharaja Hindi Remake : தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படங்களுள் ஒன்று, மகாராஜா. இந்த திரைப்படத்தின் இந்தி ரீ-மேக் தற்போது உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 28, 2024, 09:34 AM IST
  • விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா
  • இந்தியில் ரீமேக் ஆகிறது
  • ஹீரோ யார் தெரியுமா?
மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா? title=

Maharaja Hindi Remake : விஜய் சேதுபதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளியான படம் மகாராஜா. இந்தப் படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். தமிழ் ரசிகர்களின் நல்ல வரவேற்பு பற்றி இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஜா திரைப்படம்: 

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவானது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கி பிரபலமான நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்திருந்தார். சமீபத்தில் வெளியான படங்களில் இந்த படம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டது. 

இந்தியில் ரீ-மேக்:

தமிழ் உள்பட, பல தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீ-மேக் ஆகி வருகின்றன. சிங்கம், கஜினி, ராட்சசன், விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்கள் பாலிவுட்டில் ரீ-மேக் ஆகியிருக்கின்றன. அந்த வகையில், தற்போது மகாராஜா திரைப்படமும் இந்தியில் தயாராக இருக்கிறது. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஹீரோவாக ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஹீரோ யார்? 

பாலிவுட்டின் கான் நடிகர்களுள் ஒருவர், அமீர்கான். இவர்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தின் இந்தி ரீ-மேக்கிலும் நடித்திருக்கிறார். தற்போது, மகாராஜா திரைப்படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிப்பதும் இவர்தான் என பாலிவுட் திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு!

Maharaja Hindi Remake

எப்போதும் ரீ-மேக் படங்களில் நடிக்கும் ‘அந்த’ ஹீரோ:

தமிழில் இருந்து இந்தியில் ரீ-மேக் ஆகும் திரைப்படங்களில் நடிக்க எப்போதும் ஒரு நடிகரே முந்திக்கொண்டு வருவார். அவர் வேறு யாருமில்லை, அக்ஷய் குமார்தான். இவர், முதலில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் இந்தி ரீ மேக்கில் நடித்த இவர், அடுத்து துப்பாக்கி படத்தின் இந்தி ரீ-மேக்கிலும் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற தொடங்கியதை தொடர்ந்து, காங்சனா படத்தின் ரீ-மேக்கிலும் நடித்தார். ஆனால், இந்த படத்தில் இருந்து அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து அவர் ராட்சசன், ஜிகர்தண்டா, உள்ளிட்ட படங்களின் இந்தி ரீ-மேக்கிலும் நடித்தார். கடைசியாக சூரரை போற்ற படத்தின் இந்தி ரீ-மேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்தார். ஆனால் இப்படம், பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியுள்ளது. மகாராஜா ரீ-மேக்கிலும் இவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் வேறு ஹீரோ நடித்திருப்பது நிம்மதியளிப்பதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். 

மகாராஜா படத்தில் நடித்தவர்கள்:

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்த்து, இன்னும் பல திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திடிருந்தனர். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் பக்கம் வராமல் இருந்த மம்தா மோகன்தாஸ், இதில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சிங்கம் புலிக்கு இதில் முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களை தாண்டி, அபிராமி மற்றும் நட்டி என்கிற நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கூடவே இந்தி நடிகர் அனுராக் காஷ்யப்பும் இதில் நடித்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது. 

மேலும் படிக்க | Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News