Aishwarya Rajinikanth: “Why This Kolaveri பாடலால் 3 படத்திற்கு பாதிப்புதான்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளிச்!

Aishwarya Rajinikanth Talks About 3 Movie Why This Kolaveri Di: லால் சலாம் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 படத்தில் இடம் பெற்றிருந்த Why This Kolaveri Di பாடலால் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 11, 2024, 02:08 PM IST
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம், 3.
  • இந்த படத்தில் வை திஸ் கொலைவெறி பாடல் இடம் பெற்றிருந்தது.
  • இது குறித்து கருத்து கூறியுள்ளார், ஐஸ்வர்யா.
Aishwarya Rajinikanth: “Why This Kolaveri பாடலால் 3 படத்திற்கு பாதிப்புதான்” ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளிச்! title=

Aishwarya Rajinikanth Talks About 3 Movie Why This Kolaveri Di Song: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷை வைத்து 3 படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் Why This Kolaveri Di பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையாக மாறியுள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படம்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012ஆம் ஆண்டு 3 படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன், பிரபு, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில், பைபோலார் டிஸாடர் எனப்படும் மன நோயால் பாதிக்கப்பட்ட நாயகன், எது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்ற வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில்தான் Why This Kolaveri Di பாடல் இடம் பெற்றிருந்தது.

மாஸ் ஹிட்டான Why This Kolaveri Di:

3 படம் வெளியாவதற்கு முன்னரே, அப்படத்தின் பாடல் பெரிய ஹிட் அடித்து. அனிருத் இசையில், தனுஷ் பாடியிருந்த பாடல் இது. யூடியூப் தளம் பெரிதும் பிரபலமாவதற்கு முன்பே, யூடியூபில் உலகம் முழுவதும் பிரபலமான பாடல் இது. சொல்லப்போனால், இந்த பாடலே படத்திற்கு ப்ரமோஷனாக அமைந்தது. இப்பாடல், படத்தில் கதாநாயகியை நினைத்து கதாநாயகன் பாடுவது போல அமைக்கப்பட்டிருக்கும். 

மேலும் படிக்க | தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!

பாடல் குறித்து சர்ச்சையாக பேசிய ஐஸ்வர்யா..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், இப்படம் குறித்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது தான் இயக்கிய முந்தைய படங்கள் குறித்து பேசினார். அப்போது, 3 படத்தில் இடம் பெற்றிருந்த Why This Kolaveri Di பாடல் குறித்தும் பேசியிருந்தார். அப்போது, 3 திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வை திஸ் கொலைவெறி பாடல் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி பெற்றதாகவும் இது படத்திற்கு பலமாக இல்லாமல் பலவீனமாக அமைந்து விட்டதகாவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், நல்ல கதையம்சமுள்ள 3 படத்திற்கு அந்த பாடல் பெரிய அழுத்தத்தை கொடுத்து விட்டதாகவும் அந்த படத்தையே அப்பாடல் மொத்தமாக விழுங்கி விட்டதாகவும் கூறினார். மேலும், கொலைவெறி பாடலால், 3 படத்திற்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

3 படம் தோல்வி..

3 படம், திரையரங்குகளில் வெளியான போது தோல்வி அடைந்தது. இதற்கு காரணம், படத்தின் மீது Why This Kolaveri பாடல் ஏற்படுத்திய அதீத எதிர்பார்ப்பு என்று பேசப்பட்டது. அது மட்டுமன்றி, படம் வெளியான சமயத்தில் படத்தில் பேசப்பட்ட விஷயம் குறித்து பலருக்கு பெரிய புரிதல் இல்லாமல் இருந்தது. அதனாலும் படம் தோல்வி அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் படம், ரீ-ரிலீஸின் போதும் டிவி ஒளிபரப்பின் போதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Lal Salaam OTT: ‘லால் சலாம்’ படம் எந்த ஓடிடி தளத்தில் ரிலீஸ்? இதோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News