சத்தமில்லாமல் OTTல் மாஸ் காட்ட வரும் கவினின் ஸ்டார், எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

kavin Star OTT Release Date: தியேட்டரில் பட்டயை கிளப்பிய ஸ்டார் திரைப்படம் தற்போது ஓடிடியில் மாஸ் காட்ட ரெடியாக உள்ளது. இது தொடர்பான முழுமையான தகவலை இந்த கட்டுரையில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 8, 2024, 01:18 PM IST
  • கடந்த மே 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
  • இந்த படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
  • ஸ்டார் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சத்தமில்லாமல் OTTல் மாஸ் காட்ட வரும் கவினின் ஸ்டார், எந்த தளத்தில் எப்போது பார்ப்பது? title=

kavin Star OTT Release Date: தியேட்டரில் பட்டயை கிளப்பிய ஸ்டார் திரைப்படம் தற்போது ஓடிடியில் மாஸ் காட்ட ரெடியாக உள்ளது. அதன்படி எந்த ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம், மேலும் எப்போது பார்க்கலாம் என்கிற தகவலை இந்த கட்டுரையில் காண்போம்.

கவினின் ஸ்டார்:
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் கவின் (Kavin) நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஸ்டார்’ (Star Movie). இந்த கவினுடன் அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். கடந்த மே 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. முன்னதாக ஸ்டார் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்த படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர். முக்கியாமக எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

ஸ்டார் வசூல்: 
ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 18.80 கோடி வரை வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அடையாளம் தெரியாமல் மாறி போன டாப்ஸி! வைரல் ஆகும் புகைப்படங்கள்!

ஸ்டார் கதையின் கரு:
சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞன், கலை (கவின்). சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் இவருக்கு வீட்டில் அப்பா, அக்கா சப்போர்ட், அம்மாவை தவிர. +2வில் ஜஸ்ட் பாஸ் வாங்குபவரையும் பிடித்து இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட, தன் சினிமா கனவை துரத்தி பிடிக்க அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். எத்தனை தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது.

அந்த விபத்தினால் அவன் கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆனால் அவனே விட்டு விலகினாலும், அவனை மீண்டும் மீண்டும் சினிமா கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கிறது. தன் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், குடும்ப கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவன், ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தவர்களையும் தன்னையும் வெறுக்க ஆரம்பிக்கிறான். இடையில் அவனுக்கு கல்லூரி பருவத்தில் ஒரு காதல், கல்லூரியை முடித்த அவனை தேடி வரும் ஒரு காதல் என இரண்டு அழகான காதல் கதைகள். தன்னை மாற்றிக்கொண்டு சாதாரண வேலைக்கு செல்லும் அவன், தான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்து, வெறுத்து, தன்னுடன் இருப்பவர்களை புறந்தள்ளி அன்புக்குரியவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகிறான். அவனுக்கு தேவையான வாய்ப்பு கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நேரத்தில், அவன் மனைவிக்கு சீரியஸ் என போன் வருகிறது. அவன் சினிமாவை தேர்ந்தெடுத்தானா? தன் மனைவியை தேர்ந்தெடுத்தானா? என்பது தான் கதை.

ஓடிடியில் ஸ்டார்:
இந்நிலையில் தற்போது மிகவும் ஆவலுடன் மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் ஸ்டார் ஓடிடி (Star OTT Release Date) ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் ஸ்டார் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி செயலியில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது. அதுடன் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த படம் நேற்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி செயலியில் ஸ்ட்ரீமிங் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News