லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியீடு

கவினின் லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 09:42 AM IST
லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியீடு title=

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இவர் ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார்.

கவின் (Kavin) நடித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லிப்ட் (Lift) படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனா 2-வது அலை காரணமாக படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. 

ALSO READ | Kavin's LIFT: பிக்பாஸ் கவினின் LIFT படம் தொடர்பான வெளியான மாஸ் ட்வீட்

இந்நிலையில், லிப்ட் படத்தின் வெளியீடு குறித்து இந்த படத்தின் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, லிப்ட் திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் படம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை எனவே வதந்திகளை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளது.

 

 

ALSO READ | கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான முக்கிய வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News