வெளியானது கார்த்திக் சுப்பராஜ்-ன் 'மெர்குரி' Trailer!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளியாகும் மெர்குரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

Last Updated : Apr 9, 2018, 06:47 PM IST
வெளியானது கார்த்திக் சுப்பராஜ்-ன் 'மெர்குரி' Trailer! title=

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளியாகும் மெர்குரி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
 
தற்போது தமிழகத்தில் புது திரைப்படங்களை வெளியிடுவதில்லை என திரைத்துரையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டம் முடியும் வரை ‘மெர்குரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பினை வெளியிட போவதில்லை என படத்தின் இயக்குனர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டு இப்படத்தின் ட்ரைலரினை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Trending News