காஞ்சனா 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கைக் குழு!!

நடிகர்ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள காஞ்சனா 3 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

Last Updated : Apr 8, 2019, 05:00 PM IST
காஞ்சனா 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கைக் குழு!! title=

நடிகர்ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள காஞ்சனா 3 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது.

`காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர், மனோபாலா, சூரி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

சமீபத்தில் காஞ்சனா 3 படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த டிரைலர் இப்போது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் காஞ்சனா 3 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது. 

Trending News