வெளியானது விக்ரம் நடிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' ட்ரைலர்!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Jul 4, 2019, 09:00 AM IST
வெளியானது விக்ரம் நடிப்பில் உருவான 'கடாரம் கொண்டான்' ட்ரைலர்!  title=

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிளிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் firstLook போஸ்டரினை படக்குழுவினர் கடந்த நவம்பர் 6-ஆம் நாள் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதையசுத்து, நேற்று கடாரம் கொண்டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரைலரில் சீக்ரெட் போலீஸ் ஆபிஸராக இருக்கும் விக்ரம், வில்லன்களால் கடத்தப்படட அக்‌ஷராஹாசனை காப்பாற்ற செல்கிறார். இந்த நிகழ்வின்  போது நடக்கும் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

Trending News