அடேங்கப்பா... கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Akshara Haasan Net Worth: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது, எனவே இவரின் ஒட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2023, 08:01 AM IST
  • அக்ஷரா ஹாசன் சம்பள விவரம்.
  • அக்ஷரா ஹாசன் சொத்து மதிப்பு.
அடேங்கப்பா... கமல் ஹாசன் மகளின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? title=

அக்ஷரா ஹாசன் சொத்து மதிப்பு விவரம்: கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவலை இங்கே பார்போம்.

அக்ஷரா ஹாசன்:
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவர் தான் கமல்ஹாசன். இவரின் மனைவி சரிதாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களின் இளைய மகள் பெயர் தான் அக்ஷரா ஹாசன். நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித், சிறுத்தை சிவா தொடர் கூட்டணியில் உருவான விவேகம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரியானார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இப்பொழுது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விக்ரம் நடிப்பில் அப்பா கமல் ஹாசனின் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் மற்றும் ப்ங்கர்டிப் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். அதேபோல் விஜய் ஆண்டனி, அருண் விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் விஜி என்ற ரோலில் நடித்து வருகிறார்.

அக்ஷரா ஹாசன் ஆரம்பகால வாழ்க்கை:
அக்ஷரா ஹாசன் அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.  சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார். அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளியில் படித்தார். பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார். இவ்வமையம் இவருடைய தாயும், தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது. 

மேலும் படிக்க | மீண்டும் திருமண வாழ்க்கையில் இணையும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி..! உண்மை என்ன..?

அக்ஷரா ஹாசன் சம்பள விவரம்:
தற்போது தமிழ் சினிமாவின் (Tamil Cinema) பிஸி காமெடி நடித்து வரும் நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடிப்பதற்கு இவர் எவ்வளவு சம்பளம் வாங்கிறார் என்ற சரியாக தெரியவில்லை. ஆனால் கோடிக் கணக்கில் தான் இவரது சம்பளம் இருப்பதாக கூறப்படுகிறது. 

அக்ஷரா ஹாசன் சொத்து மதிப்பு:
இந்நிலையில் நடிகர் அக்ஷரா ஹாசனின் முழு சொத்து மதிப்பு (Akshara Haasan Net Worth) எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அக்ஷரா ஹாசனிடம் சுமாராக 45 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. கமல்ஹாசன் தன்னுடைய சிறு வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறார் இவ்வளவு தான் சொத்து வைத்திருக்கிறாரா? என்பது சரியாக தெரியவில்லை.

மேலும் படிக்க | கமல்ஹாசன் to விஜய்-படங்களில் தகாத வார்த்தைகள் பேசிய பிரபலங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News