‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்..!!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார். 

Last Updated : Mar 30, 2019, 06:50 PM IST
‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்..!! title=

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கின்றார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார். 

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்று புள்ளி வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொல்லிருந்த நிலையில் மாநாடு படத்தின் ஹீரோயின் யார் என்ற அந்த தகவலும் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கின்றார்.

இவர் ஏற்கனவே ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  நடித்து வரும் நிலையில் இரண்டாவதாக மாநாடு படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த தகவல் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Trending News