சினிமாவை தாண்டி பல தொழிலில் முதலீடு! இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Director Shankar Salary Per Movie : இயக்குநர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2024, 04:09 PM IST
  • இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள்
  • ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு?
  • முழு சொத்து மதிப்பிற்கான விவரம்!
சினிமாவை தாண்டி பல தொழிலில் முதலீடு! இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு? title=

Director Shankar Salary Per Movie : தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்குள் ஒருவர் என்று புகழப்படுபவர், ஷங்கர். இந்திய சினிமாவில் புதிய பரிமானங்கள் கொண்ட படங்களையும், புது விதமான கதைகளையும் அறிமுகப்படுத்தி வைத்த இவருக்கு, தற்போது 61வயது ஆகிறது. 

பெருசா யோசிக்கனும்..

சினிமா டைலாக்காக இருந்தாலும், “பெரிதாக யோசித்தால்தான் பெரிதாக வர முடியும்” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்களுள் ஒருவர், ஷங்கர். இவரது முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்து இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கினார். சிம்பிளான ஃபீல் குட் காதல் படமாக இருந்தாலும் அதிலும் பிரம்மாண்டம் காட்டுவதுதான் இவரது வேலையாக இருந்தது. 

அதற்கு ஏற்ற கதை, திரைக்கதையையும் தயார் செய்யும் இவர், அன்று முதல் இன்று வரை தன் படங்களில் எந்த வகையான புதிய டெக்னாலஜியை உபயாேகிக்கலாம்? எதை புதிதாக கொண்டு வரலாம் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டிருப்பார். 

வெகு சில படங்களை மட்டுமே இயக்கியவர்..

இயக்குநர் ஷங்கர், இந்திய சினிமாவின் பெரிய இயக்குநராக விளங்கினாலும், இதுவரை வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். 30 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், இதுவரை 16 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார்.

அது மட்டுமன்றி, ஒவ்வொரு படத்திற்கும் சரியாக 2 அல்லது 3 வருட இடைவேளையாவது எடுத்துக்கொள்வார். அதன் பிறகு வரும் அவுட்புட்டும் கச்சிதமாக இருக்கும். ஆனால், இந்தியன் 2 திரைப்படம்தான் அதில் சமீபத்தில் சொதப்பி விட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதை என்பதாலும், லாஜிக் இல்லாத காட்சிகளாலும் படம் பாக்ஸ் ஆஃபிசிலும் விமர்சனத்திலும் மரண அடி வாங்கியது. 

சொத்து மதிப்பு..

இயக்குநர் ஷங்கர், பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாகவும் விளங்குகிறார். ஆரம்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர் அப்போது சில ஆயிரங்களையே சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது, அவர் தான் பணிபுரியும் ஒரு படத்திற்கு சுமார் ரூ.50 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். 

மேலும் படிக்க | ஷங்கரின் கெரியரில் ‘இந்த’ படம் மட்டும்தான் ஃப்ளாப்..!

ரியல் எஸ்டேட்..

இயக்குநர் ஷங்கர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் இருக்கும் இவரது வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.6 கோடியாம். இது மட்டுமன்றி, சொகுசு கார்கள், ஒரு பங்களா வீடு என இருக்கும் இவருக்கு மொத்தம் சுமார் ரூ.150 கோடி ரூபாய் வரை சொத்துகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சினிமாவில் மகனும் மகளும்..

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த திருமண விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவரது இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் அறிமுகமானார். இவர், தொடர்ந்து பாடல்கள் பாடியும் சில படங்களில் நடித்தும் வருகிறார். ஷங்கருக்கு அர்ஜித் என்ற மகனும் இருக்கிறார். இவரும், விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு மீண்டும் திருமணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News