நடிகை இலியானா 2006 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். தெலுங்கில் தேவதாசு படம் மூலம் அறிமுகமான அவர், அதே வருடம், கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு மட்டும் அவர் ஆறு படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவருக்கு, தமிழில் பெரும் வரவேற்பை கொடுத்த படம் நண்பன்.
விஜய் - ஷங்கர் என வித்தியாசமான கூட்டணியில், இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான நண்பன் படத்தில், இலியானா விஜய்க்கு ஜோடியாக ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின், தமிழில் இருந்து ஒதுங்கிவிட்ட இலியானா, 2012 ஆம் ஆண்டில், பர்ஃபி படம் மூலம் இந்தியில் அறிமுகமானாக் அடுத்து, 8 படங்களில் தொடர்ந்து இந்தியில் நடித்தார். மேலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இலியானா. இவர் நடிப்பில் கடைசியாக பிக் புல் என்கிற பாலிவுட் படம் வந்தது. தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: அடங்கேப்பா... ரிலீஸ்க்கு முன்பே வசூலை குவிக்கும் பொன்னியின் செல்வன் 2!
இதற்கிடையில் நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். அவருடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த இலியானா, அவரை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார். இதன் பின்னர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருப்பினும் அவர் அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். குழந்தையின் உடையின் புகைப்படம் மற்றும் தன் கழுத்தில் இருக்கும் செயின் டாலரில் அம்மா என்கிற வாசகம் இருப்பதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இலியானாவின் இந்தப் பதிவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், ஆனால் இலியானா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் முதலில் உங்கள் கணவர் யார் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பிள்ளார்.
மேலும் படிக்க: ட்விட்டரில் ஜெயம் ரவி, த்ரிஷாவின் ப்ளூ டிக் பறிப்பு..பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ