ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள அன்பறிவு டிரெய்லர் வெளியானது

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'அன்பறிவு' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2021, 01:41 PM IST
ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள அன்பறிவு டிரெய்லர் வெளியானது title=

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள படம் 'அன்பறிவு'. இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ் ஒளிப்பதி செய்துள்ளனர். மேலும் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி (Hip Hop Tamizha) ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் தமிழா ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதீப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ALSO READ: யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன; எலும்பு முறிவா, நடந்தது என்ன

இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் நேரடி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

 

 

இந்நிலையில் இன்று ‘அன்பறிவு’ படத்தின் டிரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ALSO READ: அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News