இர்பான் கானின் இறுதி விருதாக Filmfare Awards 2021 சிறந்த நடிகர் விருது, வெற்றியாளர்களின் பட்டியல்

ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2021: தப்பட் படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதை டாப்ஸி பன்னு வென்றார்.  சிறந்த படம், சிறந்த கதை மற்றும் சிறந்த எடிட்டிங் என பல விருதுகளை வென்றது தப்பட் திரைப்படம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 28, 2021, 04:17 PM IST
  • இர்பான் கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • தாப்ஸி பன்னு சிறந்த நடிகை விருது பெற்றார்
  • தப்பட் திரைப்படத்திற்கு பல விருதுகள்
இர்பான் கானின் இறுதி விருதாக Filmfare Awards 2021 சிறந்த நடிகர் விருது,  வெற்றியாளர்களின் பட்டியல் title=

புதுடில்லி: 66 பிலிம்பேர் விருதுகள் மும்பையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது, இர்பான் கான் மரணத்திற்குப் பின்னும், சிறந்த நடிகர் என்ற விருதை வென்றார்.  Angrezi Medium திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது இர்பான் கானுக்கு வழங்கப்பட்டது.  புற்றுநோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த இர்ஃபான் கான் ஏப்ரல் 29 ஆம் தேதி மும்பையில் இறந்தார். 

நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பிலிம்பேர் விருதுகளில் இர்ஃபான் கானின் மகன் பாபில் தனது தந்தை சார்பாக விருதைப் பெற்றுக் கொண்டார். சிறந்த திரைப்படம், சிறந்த கதை மற்றும் சிறந்த எடிட்டிங் விருதுகள் தப்பட் திரைப்படத்திற்கு கிடைத்தது.

இதே படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதை டாப்ஸி பன்னு வென்றார். குலாபோ சீதாபோ (Gulabo Sitabo) திரைப்படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சன் சிறந்த நடிகர் (Critics) விருதை வென்றார்.

Also Read | Padma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்

தன்ஹாஜி: தி அன்சுங் வாரியர் (Tanhaji: The Unsung Warrior) திரைப்படத்தில் நடித்ததற்காக சைஃப் அலி கானுக்கு  சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 

கஜோலின் தேவி சிறந்த குறும்படம் (பிரபலமான தேர்வு) விருதை வென்றது. இந்நிகழ்ச்சியில் தப்ஸி பன்னு, ஆயுஷ்மான் குரானா, சன்னி லியோன், நோரா ஃபதேஹி, ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ராஜ்கும்மர் ராவ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வெற்றியாளர்களின் முழுமையான பட்டியல் இங்கே:

சிறந்த படம் - தப்பட்

சிறந்த இயக்குனர் _ ஓம் ரவுத் (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்)

சிறந்த படம் (Critics) 

பிரதீக் வாட்ஸ் ( Prateek Vats (Eeb Allay Ooo!))

Also Read | Australia: 2020 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

ஒரு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்)

இர்பான் (Angrezi Medium)

சிறந்த நடிகர் (Critics) - அமிதாப் பச்சன் - குலாபோ சீதாபோ ( Gulabo Sitabo)

சிறந்த கதாநாயகி - டாப்ஸி பன்னு (தப்பட்)

சிறந்த நடிகை  (Critics) - Tillotama Shome - Sir

துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - சைஃப் அலி கான் தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்

சிறந்த துணை நடிகை -  ஃபாரோக் ஜாஃபர் - குலாபோ சீதாபோ

சிறந்த கதை - அனுபவ் சுஷிலா சின்ஹா ​​& மிருன்மாயி லாகூ வைகுல் (தப்பாட்)

சிறந்த திரைக்கதை - ரோஹேனா கெரா (சர்)

சிறந்த வசனம் - ஜூஹி சதுர்வேதி (குலாபோ சீதாபோ)

சிறந்த அறிமுக இயக்குனர் - ராஜேஷ் கிருஷ்ணன் (லூட்கேஸ்)

சிறந்த அறிமுக நடிகை - அலயா எஃப் (ஜவானி ஜானேமன்)

Also Read | தானங்கள் செய்வதன் பலன்களை தெரிந்து செய்தால் எந்நாளும் நன்னாளே....

சிறந்த இசை ஆல்பம் - பிரிதம்- லுடோ

சிறந்த பாடல் - குல்சார்- சப்பக் (Chhappak)

சிறந்த பின்னணி பாடகர் - ராகவ் சைதன்யா- ஏக் துக்தா தூப் (தப்பட்)

சிறந்த பின்னணி பாடகி - ஆசீஸ் கவுர்- மலாங் (மலாங்)

வாழ்நாள் சாதனையாளர் விருது - இர்பான்

சிறந்த அதிரடி காட்சி - Ramazan Bulut, Rp Yadav (Tanhaji: The Unsung Warrior)

சிறந்த பின்னணி இசை - மங்கேஷ் உர்மிளா தக்தே (தப்பட்)

சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாதாயே (குலாபோ சீதாபோ)

சிறந்த நடனம் - ஃபரா கான்- தில் பெச்சாரா (தில் பெச்சாரா)

சிறந்த ஆடை வடிவமைப்பு - வீர கபூர் ஈ (குலாபோ சீதாபோ)

சிறந்த எடிட்டிங் - யஷா புஷ்பா ராம்சந்தனி (தப்பட்)

Also Read | Tiruchendur Temple பங்குனி உத்திர விழாவின் மகிமைகள் தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News