இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கொடிய கொரோனா தொற்றால் (Coronavirus) அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது தமிழ் திரைப்படகளில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மாறன் (Maran) கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
ALSO READ | 'கெணத்த காணோம்' புகழ் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன். கடந்த சில நாடகளுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
நடிகர் மாறன் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தவர். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR