எனை நோக்கி பாயும் தோட்டா - பர்ஸ்ட் லுக் நவ.,27-ல் வெளியீடு

Last Updated : Nov 20, 2016, 02:39 PM IST
எனை நோக்கி பாயும் தோட்டா - பர்ஸ்ட் லுக் நவ.,27-ல் வெளியீடு title=

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘ எனை நோக்கி பாயும் தோட்டா ’ 

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டரை படக்குழுவினர் நவம்பர் 27-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். 

கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதையடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘எனை நோக்கி  பாயும் தோட்டா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய விஷயங்களில் மட்டும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. ஒரு பெண்ணை ஒரு இடத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். அப்புறம் ஒரு அண்ணன் கதாபாத்திரம் இருக்கும். இவர்கள் இருவரையும் தேடும் ஒரு பயணம் தான் 'என்னை நோக்கி  பாயும் தோட்டா'." என்று தெரிவித்திருக்கிறார் கெளதம் மேனன்.

Trending News