இளைய தளபதி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை தயாரித்தவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் அப்பச்சன். அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007ஆம் ஆண்டில் அப்பச்சன் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘அழகிய தமிழ்மகன்’. இந்த வெற்றி திரைப்படத்தில் விஜய், ஸ்ரேயா, நமீதா, என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அப்பச்சனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்வர்க்க சித்ரா தயாரித்த ‘அழகிய தமிழ்மகன்’திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தை வெளியிடுவதற்கு பணம் பற்றக்குறையாக இருந்த நிலையில், 15 நாட்களில் பணத்தைத் திருப்பி தருவதாக கூறிய அப்பச்சன், ஒரு கோடி ரூபாயை, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடனாக பெற்றிருந்தார்.
இதற்காக அப்பச்சன் கொடுத்த காசோலை, வங்கி கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்துவிட்டது. இது தொடர்பாக, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008-ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.
12 ஆண்டுகளாக நடைபெற்று இந்த காசோலை மோசடி வழக்க்கு நடைபெற்றது. ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி வேல்ராஜ். அத்துடன் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து கடனாய் வாங்கிய ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR