பரியேறும் பெருமாள்: இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பாளராகிறார்!!

Last Updated : Jan 2, 2017, 05:27 PM IST
பரியேறும் பெருமாள்: இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பாளராகிறார்!!  title=

ரஜினியின் கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார் 

புதுமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.தமிழில் அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பிறகு மெட்ராஸ் மற்றும் 'கபாலி' ஆகிய வெற்றி படங்களின் மூலமாக முன்னணி இயக்குநர் ஆனார், தற்போது தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினியை வைத்து இயக்கவுள்ள படத்தின் பணிகளை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், பா.ரஞ்சித் தற்போது ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' என்று தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் சூட்டியுள்ளார்.

இவரது தயாரிப்பு நிறுவனம் 'பரியேறும் பெருமாள்' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து =வரும் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதில் நடிக்க கதிர் நாற்றும் ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

Trending News