தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராமச்சரண் இணைந்து ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. அப்பா மகன் இருவரும் இணைந்து நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தெலுங்கு சினிமாவில் பெரிய இயக்குனரான கொரடாலா சிவா இந்த படத்தை இயக்கி இருந்தார். இதற்கு முன் மகேஷ் பாபுவை வைத்து பரத் அனே நேனு, ஜுனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஜனதா கறகே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
மேலும் படிக்க | கதிர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
இன்று உலகம் முழுவதும் ஆச்சார்யா படம் வெளியாகி உள்ளது. ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க இப்படம் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை ஏமாற்றி உள்ளதாகவே தற்போது வரை ரிவியூ வந்துள்ளது. சிரஞ்சீவி கதாபாத்திரம் மிகவும் மோசமாக எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரம் மிகவும் வீக் ஆகா இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கம்பேர் செய்யும் போது ராம் சரண் கதாபாத்திரம் நன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
#Acharya (Telugu | 2022) - THEATRE.
Chiru’s characterization is damn weak such tat his screen presence didnt create any impact. Charan role is slightly btr. Their combo scenes ok. Best part in film is ‘Bhale Bhale’ song & dance. Pathetic, Unexciting screenplay by Koratala. SKIP! pic.twitter.com/rjXvLTbGW6
— CK Review (@CKReview1) April 29, 2022
Telugu360 Rating : 1.5/5
Director Koratala's unexpectedly worst film, A Mega failure
Read full review here https://t.co/HLcl6qrX0p#AcharyaReview #Acharya
— Telugu360 (@Telugu360) April 28, 2022
கொரடாலா சிவாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் பதிவிட்டு உள்ளனர். இந்த ஆண்டில் மிகவும் மோசமான படம் என்று அதிகமான பேர் தெரிவித்துள்ளனர். மெகா ஸ்டார் படம் மெகா பெயிலியர் என்றும் கிண்டலடித்து வருகின்றனர். கொரடாலா சிவா மிகவும் மோசமாக படத்தை இயக்கி உள்ளார். மோசமான நரேடிவ், சிஜி சரி இல்லை, ஹீரோவை நம்பி படத்தை இயக்கி உள்ளார் என்றும் குற்றசாட்டு உள்ளது. தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய தோல்வி படம் என்று ஒட்டுமொத்தமாக கூறப்படுகிறது.
#AcharyaReview : “ULTRA DISASTER “
(#KoratalaSiva Weakest Work Till Date)Rating : 1.5/5
Positives:
#Chiranjeevi & #RamCharanNegatives:
Entire Movie
Poor VFX
Ridiculous Narrative#Chiranjeevi #MegaStarChiranjeevi #RamCharan #Acharya #PoojaHegde— PaniPuri (@THEPANIPURI) April 28, 2022
Still can’t believe that it’s a #KoratalaSiva film. Will be remembered for a long time that #ramcharan & #Chiranjeevi sir giving such a huge disaster to the industry. Huge disappointment.
#Acharya #AcharyaReview #Acharyamovie pic.twitter.com/O9SMeX1RaC— Theinfiniteview (@theinfiniteview) April 29, 2022
மேலும் படிக்க | கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR