அடங்கேப்பா..! ‘இந்த’ பேய் படத்தில் 10 பாடல்கள் இருக்கா..? இசையமைப்பாளர் சொன்ன தகவல்..!

பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் 10 பாடல்கள் இருப்பதாக இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி தெரிவித்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2023, 03:41 PM IST
  • ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சந்திரமுகி 2.
  • பி.வாசு இப்படத்தை இயக்கியுள்ளார்.
  • இந்த படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம்.
அடங்கேப்பா..! ‘இந்த’ பேய் படத்தில் 10 பாடல்கள் இருக்கா..? இசையமைப்பாளர் சொன்ன தகவல்..!  title=

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த சந்திரமுகி திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஜேதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. 

சந்திரமுகி 2 : 

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ‘வேட்டையபுரம் அரண்மனை’. இதில் உள்ள ஆபத்து தெரியாமல் தங்களது குடும்பத்தினருடன் குடிபுகும் கணவன்-மனைவி. பேய் படம் என்று நினைத்தால் ட்விஸ்டாக வந்து நிற்கிறது ‘Split Personality Disorder’. இதனால் சந்திரமுகி எனும் கதாப்பாத்திரமாக மாறும் நாயகி. இறுதியில் நடந்தது என்ன? இப்படி பரபர கதையம்சத்துடன் 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனங்களில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ள படம், சந்திரமுகி. மலையாளத்தில் 1993ஆம் ஆண்டு ரிலீஸான ‘மணிசித்ரதாழு’ எனும் படத்தின் தமிழ் ரீ-மேக் ஆக வெளிவந்த படம்தான் சந்திரமுகி. இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. 

மேலும் படிக்க | திருநங்கையாக களமிறங்கும் ரஜினி பட நடிகர்..! ரசிகர்கள் வரவேற்பு..!

இரண்டாம் பாகம்..

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த், இந்த படத்திலும் ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பரம ரசிகரான ராகவா லாரன்ஸ்தான் இதில் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் இதில் நாயகியாக நடிக்கிறார். வடிவேலு, சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவிற்கு வந்தது. 

முதல் பாடல் வெளியீடு: 

‘சந்திரமுகி 2’ படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இவர், ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கி உலகம் முழுவதும் பிரபலமானார். சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல், சில தினங்களுக்கு முன்பு வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியாகியிருந்த இந்த பாடலுக்கு ‘ஸ்வாகதாஞ்சலி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் படத்தின் நாயகி கங்கனா ரணாவத் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராகவா லாரன்ஸ், வேட்டையன் ராஜாவின் கெட்-அப்பில் இருக்கும் புகைப்படமும் இதில் இடம் பெற்றிருந்தது. இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர். 5 நாட்களுக்கு முன்னர் வெளியான இப்பாடல் தற்போது 5.4 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. 

10 பாடல்கள்..

இசையமைப்பாளர் கீரவாணி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். 

அந்த பதிவில் அவர், சந்திரமுகி 2 படத்தில் இடம் பெற்றுள்ள இதர 9 பாடல்களையும் ரிலீஸ் செய்ய ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். “சந்திரமுகி 2 படத்தில் வேலை செய்யும் கடைசி நாள். இப்படம், ராகவா லாரன்ஸ் மற்றும் பி.வாசுவுடன் ஏற்பட்ட நல்ல பயணமாக இருந்தது” என்று அவர் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். 

ரசிகர்கள் அதிர்ச்சி..! 

சந்திரமுகி 2 படத்தில் 10 பாடல்கள் இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பயங்கர ஷாக் ஆகியுள்ளனர். பொதுவாக, தமிழ் படங்களில் 3 அல்லது 4 பாடல்கள் மட்டுமே அதிகபட்சமாக இருக்கும். மியூசிக்கல் ஃபிலிம் என்று சொல்லப்படும் இசை சார்ந்த படங்களை தவிர பிற படங்களில் பாடல்கள் வேகத்தடைகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், “பேய் படமாக உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் 10 பாடல்கள் தேவைதானா?” என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர், படத்தில் “10 பாடல்கள் இருந்தால் டைலாக் மிகவும் குறைவாக இருக்குமே..” என தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு திரையுலக ரசிகர்களே அதிகமாக காத்துக்கொண்டுள்ளனர். 

சந்திரமுகி 2 திரைப்படம், வரும் விநாயகர் சதுர்த்தியன்று (செப்டம்பர் 19) திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க | நடிகையுடன் மேடையிலேயே எல்லைமீறி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News