புஷ்பா வசூல் நிலவரம்; நான்கு நாட்களில் இத்தனை கோடியா

உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 173 கோடி ருபாய் பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2021, 03:35 PM IST
புஷ்பா வசூல் நிலவரம்; நான்கு நாட்களில் இத்தனை கோடியா title=

கடந்த வாரம் ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. மூன்றே நாளில் 173 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அந்த படம். 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’ (Pushpa: The Rise part 1) . தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் கடந்த 17 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். புஷ்பா 1 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இரண்டாம் பாகம் 2022லேயே வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!

இந்நிலையில் தற்போது இன்று நான்காம் நாள் வசூலோடு சேர்ந்து மொத்த வசூல் 190 கோடியை தொட்டு உள்ளது. அதன்படி இன்று 200 கோடி என்ற மைல்கல்லை புஷ்பா கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஹிந்தியில் புஷ்பா படத்தின் நான்காம் நாள் வசூல் முதல் இரண்டு நாட்களை விட அதிகரித்து இருக்கிறது. முதல் நாள் - ₹ 3.11 Cr, இரண்டாம் நாள் - ₹ 3.44 Cr, மூன்றாம் நாள் - ₹ 5.18 Cr, நான்காம் நாள் - ₹ 4.25 Cr  ஆகும். 

அதன்படி தமிழில் புஷ்பா நான்காம் நாளிலேயே போட்ட முதலீடை திரும்ப எடுத்து லாபக்கணக்கை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ALSO READ | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News