திரைப்படமாக ஒளிபரப்பாகும் அயலி வெப்தொடர்.. ஜீ தமிழ் கொடுத்த செம அப்டேட்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு நிகராக தற்போது வெப் தொடர்களும் மக்களை கவர தொடங்கிவிட்டது, குறிப்பாக அயலி, பேப்பர் ராக்கெட் என பல தொடர்கள் ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 01:07 PM IST
  • திரைப்படமாக வரும் அயலி வெப் சீரிஸ்
  • மார்ச் 10 ஆம் தேதி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பு
  • பெண் விடுதலை குறித்து பேசும் படம்
திரைப்படமாக ஒளிபரப்பாகும் அயலி வெப்தொடர்.. ஜீ தமிழ் கொடுத்த செம அப்டேட் title=

ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்களை மனதை கவர்ந்த அயலி வெப் தொடர் தற்போது திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆமாம் வரும் மார்ச்10-ம் தேதி ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு அயலி திரைப்படமாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ராம்சரணுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

மூட நம்பிக்கையால் மூழ்கி கிடக்கும் ஒரு கிராமத்தை அரசியல் வாதிகள் தங்களது ஆதாயங்களுக்காக வயசுக்கு வந்த பெண்கள் படிக்ககூடாது, கோவிலுக்கு போக கூடாது என பல கட்டுப்பாடுகளை போடுகின்றனர். 10-வது படிக்கும் தமிழ் செல்வி என்ற பெண் இந்த கட்டுப்பாடுகளை உடைத்தெரிய என்னவெல்லாம் செய்கிறாள், அவளது ஆசைப்படி டாக்டராகிறாளா? இல்லையா என்பதுதான் இந்தவெப் தொடரின் கதைக்களம். 

சிந்திக்கவும் சிரிக்கவும் செய்வதோடு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களின் பாராட்டுகளை குவித்த இந்த வெப் தொடர் திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மார்ச் 10-ம் தேதி மதியம்1.30 மணிக்கு அயலி திரைப்படத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.

மேலும் படிக்க | Sivakarthikeyan: ‘அனிமல்’ படத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்-வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News