ஓடிடியில் சாதனை படைத்து வரும் டிமான்டி காலனி 2! 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம்!

Demonty Colony 2: அருள்நிதி நடிப்பில் வெளியான "டிமான்டி காலனி 2" திரைப்படம் ஜெட் வேகத்தில் ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2024, 09:13 PM IST
  • பிளாக்பஸ்டர் "டிமான்டி காலனி 2" திரைப்படம்.
  • ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது.
  • பலரும் திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஓடிடியில் சாதனை படைத்து வரும் டிமான்டி காலனி 2! 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம்! title=

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5ல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான,  "டிமான்டி காலனி 2"  திரைப்படம், வெளியான வேகத்தில்,  100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல்  பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது.   10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு  நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள  ‘டிமான்டி காலனி  2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது.  ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்லும் இப்படத்தை,  இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் கண்டுகளியுங்கள். 

மேலும் படிக்க | கோட் உள்பட பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை  ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க  நண்பர்கள்  ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் - அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த  சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது. 

"டிமான்டி காலனி 2" படத்தின் இந்த  வெற்றி குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில், “ ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியரில் டிமான்டி காலனி 2க்கு கிடைத்த அபாரமான வரவேற்பைக் கண்டு மெய்சிலிர்த்துவிட்டேன்! வெளியான வேகத்தில் இப்படம் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது,  அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி சங்கரின் மிகச்சிறப்பான நடிப்பு கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் உழைப்பு இப்போது  கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான், ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் இன்னும் பல சாதனைகளை படைப்பதைக் காண ஆவலோடு உள்ளேன்.  

நடிகர் அருள்நிதி கூறுகையில், "ஒரு அற்புதமான திரையரங்க வெற்றிக்குப் பிறகு, டிமான்டி காலனி 2 அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம்,  இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இப்போது ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.  இந்த அபாரமான பயணத்தில் எங்களுடன் இணைந்து உழைத்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். எங்கள் படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எப்படிக் கவருகிறது, என்பதைப் பார்க்க ஆவலோடு உள்ளேன், ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் அதீத அன்பும், வாழ்த்துக்களும் உண்மையிலேயே  பெரும்  மகிழ்ச்சி தருகிறது. அனைவருக்கும் நன்றி. 

மேலும் படிக்க | Vaazhai OTT : வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எப்போது? எந்த தளத்தில் பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News