அண்ணா: சூடாமணிக்கு உயிருக்கு வந்த ஆபத்து.. இசக்கியை தலை மூழ்கிய ஷண்முகம்

Anna Serial Update Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2024, 04:07 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், அண்ணா.
  • இன்றைய ட்விஸ்ட் என்ன?
  • பரபர திருப்பங்களுடன் அண்ணா தொடர்.
அண்ணா: சூடாமணிக்கு உயிருக்கு வந்த ஆபத்து.. இசக்கியை தலை மூழ்கிய ஷண்முகம் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா கழுத்தில் தாலி கட்ட சௌந்தரபாண்டி பிளானை சொல்ல அதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோட்:

அதாவது, பஞ்சாயத்துக்கு நடக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று சாக போய் கடைசியாக கண் விழிக்கிறாள். அடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் இனிமே இந்த வீட்டில் யாரும் இசக்கியை பற்றி பேச கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறான். 

மேலும் படிக்க | தீபா பாடுவதை எப்படி தடுப்பது என கூட்டு சதி செய்யும் மாயாவும் ரூபஸ்ரீயும்!

இந்த நேரம் பார்த்து இசக்கியும் பாக்கியமும் ஆட்டோவில் வந்து இறங்க உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தும் ஷண்முகம் இசக்கியின் துணிகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துகிறான். இனிமே ஓட்டும் இல்ல உறவும் இல்ல என்று சொல்ல இசக்கி கண்ணீருடன் வெளியேறுகிறாள். 

அடுத்து பாக்கியம் அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல ரூமுக்குள் சென்ற இசக்கி ரத்தனாவோட வாழ்க்கைக்காகவும் நீ கொலைகாரனாக ஆகிட கூடாது என்பதற்காகவும் தான் இப்படியொரு முடிவை எடுத்தேன், இதை நான் பிடித்து எடுக்கல என்று கலங்கி அழ சிவபாலன் இதை கேட்டு விடுகிறான். 

உடனே அவன் ரூமுக்குள் வர இசக்கி அழுகையை அடக்கி கொண்டு எதுவும் காட்டி கொள்ளாமல் இருக்க சிவபாலனும் எதையும் கேட்காதது போல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News