இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்: கடல் கன்னியாக கலக்க வருகிறார் ஆண்ட்ரியா!!

கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 7, 2022, 01:44 PM IST
  • கடல் கன்னியாக நடிக்கவுள்ளார் ஆண்ட்ரியா.
  • இப்படம் இந்தியாவின் முதல் கடல் கன்னி படமாக இருக்கும்.
  • படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்: கடல் கன்னியாக கலக்க வருகிறார் ஆண்ட்ரியா!! title=

ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள முதல் படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இப்படத்தின் கதாநாயகியாக, ஒரு கடல்கன்னியாக ஆண்ட்ரியா (Andrea Jeremiah) நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவிலேயே முதல் கடல் கன்னி படமாக இது இருக்கும். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை, மணிரத்னத்தின் (Manirathnam) உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர், ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவருகிறது. 

ALSO READ | மகா காந்திக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் - விஜய் சேதுபதி! 

இதையடுத்து திருச்செந்தூர்  மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும் எனவும் 2022 ஆம் ஆண்டின் கோடை வெளியீடாக படம் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கடல்கன்னி படத்தில் அனிமேஷனுக்கு முக்கிய இடம் உள்ளடு. படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை லார்வென் (LORVEN) என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது. 

படத்தின் (Tamil Movie) ஒளிப்பதிவை பால சுப்ரமணியெம் கையாள, கலைப்பணிகள் கிராஃபோர்ட்டின் பொறுப்பில் உள்ளன. பி.ஆர்.ஓ பணிகளை ஜான்சன் மேற்கொள்ள, ஃபோக்கஸ் பிலிம்ஸ் படத்தை தயாரிக்கின்றது.

இந்தியாவின் முதல் கடல்கன்னி படம் பற்றிய தகவல்கள் வெளிவந்தது முதல், ரசிகளுக்கு இடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ALSO READ | இந்த வாரம் OTT-ல் வெளியாகும் புதிய திரைப்படங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News