தாயாகப்போகும் ஆலியாபட் - மகிழ்ச்சியில் ரன்பீர் கபூர்

தான் விரைவில் தாயாகப்போகும் செய்தியை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் நடிகை ஆலியா பட்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 27, 2022, 11:47 AM IST
  • தாயாகப்போகும் ஆலியா பட்
  • இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு
  • இணையத்தில் குவியும் வாழ்த்து
தாயாகப்போகும் ஆலியாபட் - மகிழ்ச்சியில் ரன்பீர் கபூர் title=

பாலிவுட் ஸ்டார்களாக இருக்கும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். காதலித்து வந்த அவர்கள் வெளிப்படையாக தங்கள் காதலை நீண்ட நாட்கள் அறிவிக்காமலேயே இருந்தனர். இருப்பினும் இருவரின் காதலைப் பற்றிய செய்திகளும் வதந்திகளும் அவ்வப்போது வெளிவந்த வண்ணமே இருந்தது. இதனை பொருட்படுத்தாத இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தினர். பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க | பிரபாஸ் படத்தில் நடிக்க பிரித்விராஜ் போட்ட கண்டிஷன்!

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரைத்துதுறையினர் உள்ளிட்டோருக்கு பிறகு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு செய்திகளில் அடிபடாமல் இருந்த ஆலியாபட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதி, தற்போது லைம் லைட்டுக்கு வந்துள்ளனர். அதாவது, தாங்கள் இருவரும் பெற்றோர் ஆகும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt  (@aliaabhatt)

நடிகை ஆலியா பட் இந்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் குழந்தை விரைவில் வர இருக்கிறது என பெருமகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். ஆலியா பட்டின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிகின்றனர்.  

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு சர்பிரைஸ்! 'வாரிசு' படத்தில் ரீமிக்ஸ் ஆகும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News