‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்!

அஜித்தின் வலிமை எவ்வளவு வசூல் செய்துள்ளது எனும் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 12:32 PM IST
  • அஜித்தின் வலிமை எவ்வளவு வசூல்?
  • வசூல் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  • வலிமை ரிலீஸாகி ஒரு மாதம் நிறைவு
‘வலிமை’ வசூல் எவ்வளவு? - சீக்ரெட்டை உடைத்த போனிகபூர்! title=

நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து அஜித்- வினோத்- போனிகபூர் கூட்டணி வலிமை படத்திலும் இணைந்தது. அஜித்துடன் ஹியூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்டோர் இணைந்து நடித்த இப்படத்தின் ரிலீஸ் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது. இறுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இப்படம் வெளியானது. அஜித்தின் படங்களுக்கு இருக்கும் வழக்கமான ஓப்பனிங் இப்படத்துக்கும் இருந்தது. பல ஏரியாக்களில் சிறப்புக் காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.  வலிமை வெளியாகி சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலே தற்போது வந்துள்ளது. இம்முறை இதனை அறிவித்திருப்பது அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். அந்த வகையில் வலிமை திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் படிக்க  | அஜித்துக்கு சம்பளம் இத்தனை கோடியா?! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

அந்த வகையில் வலிமை ஒட்டுமொத்தமாக சுமார் 225 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் எனவும் தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் அடுத்ததாக ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. நாளை முதல் (மார்ச் 25)  வலிமை படத்தை ஜீ-5 ஓடிடி தளத்திலும் காணலாம்.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News