இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியாக உள்ள "வீரபாண்டியபுரம்" படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இசைவெளியிட்டு விழாவில் நடிகர் ஜெய், இயக்குநர் சுசீந்திரன், நகைச்சுவை நடிகர் பாலா சரவணன் உள்ளிட்டவை பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் அடுத்த 4 படங்களின் அப்டேட்டுகள்!
நிகழ்ச்சியில் பேசிய பாலா சரவணன், "இயக்குநர் சுசீந்திரன்க்கு நன்றி. 6 பாடங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருடைய தம்பியாக என்னை ஏற்று கொண்டுள்ளார். நடிகர் ஜெய் ஒரு நல்ல செப். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன வேண்டும் என்று கேட்டு சமைத்து கொடுப்பார்" என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய், "இந்த படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளேன். 18 வருடம் இதற்காக காத்திருந்தேன். வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என முடிவு செஞ்சன். அதற்காக உழைத்தேன். கவிஞர் வைரமுத்து சார் கூட பாராட்டியதாக சொன்னாங்க. தொடர்ந்து மியூசிக் இசைக்க கான்பிடிண்ட் இருக்கு.
ஒரு நாள் ஷூட்டிங் நடக்கும் போது இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பில் பாதியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அவர் வரும் வரை அன்று படத்தை இயக்க என்னை அனுமதித்தார். ஒரு நாள் படத்தை இயக்கியது நல்லா இருந்தது. வரும் காலங்களில் இசையமைக்க உள்ளேன்" என தெரிவித்தார். கடைசியாக பேசிய சுசீந்திரன், " இனி வரும் காலங்களில் வித்தியசமான தரமான படம் என்னிடம் இருந்து வரும்.
பாண்டியநாடு படம் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சூரியிடம் பாராட்டியுள்ளார். ஒரு வருடம் முன்பாக எனக்கு கை உடைந்தபோது நடிகர் ரஜினிகாந்த் திடீரென தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு ஆச்சரியம்.
நடிகர் அஜித் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அரசியலில் நிம்மதி இருக்காது. ஒரு நாள் டிவிட்டரில் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லியிருந்தேன். அது தப்பு. டிவிட்டரில் இப்போ நான் இல்லை" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR