தனுஷுடன் பிரிவிற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா!

'முஸாபிர்' பாடலுக்கான படப்பிடிப்பை முடிந்துவிட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 10:38 AM IST
  • சமீபத்தில் ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்து பெற்றனர்.
  • கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் சமீப காலமாக ஹாட் டாப்பிக்காக இருந்தது.
தனுஷுடன் பிரிவிற்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா!  title=

நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பலரும் நன்கு அறிந்த ஒரு பிரபலம்.  சமீபத்தில் அனைத்து தரப்பினரின் காதுகளிலும் ஒலித்தது ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவு செய்தி தான்.  நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 

Aishwarya R. Dhanush - Wikipedia

மேலும் படிக்க | தனுஷுடனான பிரிவுக்குப் பிறகு பிஸியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்; ஸ்பெஷல் போட்டோ

திடீரென்று தாங்கள் பிரிய போவதாக இவர்கள் அறிவித்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்தது.  கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் சமீப காலமாக ஹாட் டாப்பிக்காக இருந்தது, இந்த செய்தி வெளியானத்திலிருந்தே அனைவரின் பார்வையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நோக்கியே இருந்தது.  அதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

I don't think I will direct my father: Aishwarya R Dhanush - The Statesman

பல துயரங்களை கடந்தும் ஐஸ்வர்யா தனது பணிகளிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து அவரது பணியில் கவனம் செலுத்தி வந்தார்.  ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே ஒருவரையொருவர் குறை கூறி கொள்ளாமல் அவர்களது திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் திருப்தியை அளித்திருக்கிறது.  இந்நிலையில் அன்கித் திவாரி இசையமைப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முஸாபிர் என்கிற பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்.  மூன்று  மொழிகளில் வெளியாகப்போகும் இந்த பாடலை தமிழில் அனிருத் பாடுகிறார், அதேபோல தெலுங்கு மொழியில் சாகர் என்பவரும் மற்றும் மலையாள மொழியில் ரஞ்சித் கோவிந்த என்பவரும் பாடியுள்ளனர். 

 

இந்த செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'முஸாபிர்' பாடல் செட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களுடன் பாடலின் படப்பிடிப்பு நிறைவுற்றதாகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் மார்ச் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | தனுஷிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பாரா ஐஸ்வர்யா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News