வெளியானது ஜெயம் ரவியின் 24-வது படத்தின் தலைப்பு!!

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Last Updated : Dec 14, 2017, 09:38 AM IST
வெளியானது ஜெயம் ரவியின் 24-வது படத்தின் தலைப்பு!! title=

நடிகர் ஜெயம் ரவியின் 24-வது படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வரும் ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்) முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இது ஜெயம் ரவியின் 24-வது படமாக ஆகும். 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

 

 

Trending News