ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன்..! பிரபல நடிகையின் மகள்தான் கதாநாயகியா..?

Vijay Son Jason Sanjay: நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடித்தால் ஒரு பிரபல நாயகியின் மகள் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 07:24 AM IST
  • நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்.
  • இவரை ஹீரோவாக வைத்து படம் இயக்க பிரபல இயக்குநர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
  • நாயகியாக நடிக்க இருப்பது யார் தெரியுமா..?
ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன்..! பிரபல நடிகையின் மகள்தான் கதாநாயகியா..?  title=

தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். 

விஜய்யின் பிள்ளைகள்:

நடிகர் விஜய், சங்கீதாவை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2000ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் 2005ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். 22 வயதாகும் சஞ்சய், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் திரைப்பட கலையை பயின்று வருகிறார். விஜய்யின் மகளான திவ்யா சாஷாவிற்கு 17 வயதாகிறது. 

மேலும் படிக்க | நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் பார்த்துள்ளீர்களா? வைரலாகும் படங்கள்!

மகனுடன் விஜய்:

சமீப காலமாக ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் விஜய், முன்னர் குழந்தைகளின் மனங்களில் இடம் பிடிக்கும் வகையிலும் மக்களை கவரும் வகையிலான கதாப்பாத்திரங்களிலும் நடித்து வந்தார். விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசந்த முல்லை’ பாடல் பலருக்கும் பிடிக்கும். இந்த பாடலில் சிறு பிள்ளையாக அறிமுகமாகியிருந்தார் விஜய்யின் மகன் சஞ்சய். 7 வயது குழந்தையாக இந்த பாடலில் தோன்றிய இவரை பலருக்கும் பிடித்து பாேனது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் அப்பாவுடன் நடனமாடி கலக்கினார் சஞ்சய். இதையடுத்து அவரை எந்த படத்திலும் காணவில்லை. 

ஹீரோவாக சஞ்சய்..?

திரைப்பட கலை பயின்று வரும் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆயத்த பணிகளில்தான் சஞ்சய் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சஞ்சய் அவ்வப்போது குறும்படங்களை எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளாராம். பிற வாரிசு நடிகர்களை போலவே விஜய்யின் மகனும் சினிமாவிற்கு வந்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை தன் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக பிரபல இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார். 

பிரபல இயக்குநர்:

1999ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம், ‘நீ வருவாய் என’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ராஜகுமாரன். நடிகை தேவயானியும் இவரும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரான் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவர், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும் அதில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

‘இவர்தான் நாயகி..’

ராஜகுமாரன்-தேவயானி தம்பதியருக்கு பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் இனியா குமாரான் என்ற இரண்டு மகள்கள் உள்ளார். விஜய் மகன் ஹீரோவாக நடித்தால் தன் மகளை அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என ராஜகுமாரன் ஒரு நேர்காணலில் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். மகள்களுக்கும் சினிமா மீது ஆசை உள்ளதாகவும் விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கினால் அதில் தன் மகள்களை நடிக்க வைக்கலாமா என ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஷாருக்கானுக்கு 100 கோடி-நயன்தாராவுக்கு இவ்ளோதானா..! ‘ஜவான்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News