நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரி நடித்துள்ளார். இந்த வாரம் ரிலீஸாகும் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, இயக்குநர் சங்கர், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சூரி, விருமன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். சூர்யாவைப் பாராட்டும்போது ஆயிரம் கோயில் கட்டுவதைவிட ஏழை ஒருவரை படிக்க வைப்பது மேலானது என்றும் கூறி, அவரை புகழ்ந்திருந்தார். அவரின் இந்தக் கருத்து இந்து அமைப்புகள் சார்பில் சர்ச்சையாக்கப்பட்டது. சிலர் எதிர்ப்புகள் கூட தெரிவித்தனர்.
சூரி பேசும்போது, " நான் படிக்கல. ஆனால் ஒருவருக்கு கல்வி தான் முக்கியம். ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட, ஆயிரம் அன்னச்சத்திரங்களைக் கட்டுவதை விட ஏழை ஒருவரை படிக்க வைப்பது சிறந்தது" என்றார். அதற்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். அதில் " நான் கோயில்களுக்கு எதிரானவன் அல்ல. நான் தீவிர மதுரை மீனாட்சி அம்மன் பக்தன். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை" என விளக்கம் அளித்தார். அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். தற்போது கோயில் விழா ஒன்றில் நடிகர் சூரி ஒயிலாட்டம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஜெய்லரில் என்டிரியான நீலாம்பரி; மீண்டும் படையப்பா காம்போ
சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவரது சொந்த ஊர்காரர்கள், அவரது நண்பர்கள் நடிகர் சூரியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளனர்.
மேலும் படிக்க | கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ