வடக்கா தெற்கா - பேட்டியில் கமல் ஹாசன் சொல்வது என்ன?

வடக்கையும், தெற்கையும் பிரிக்கக்கூடாது என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 05:38 PM IST
  • கான்ஸ் திரைப்பட விழா
  • கான்ஸ் விழாவில் கமல் ஹாசன்
  • கமல் ஹாசன் பேட்டி
வடக்கா தெற்கா - பேட்டியில் கமல் ஹாசன் சொல்வது என்ன? title=

பான் இந்தியா படங்கள் சமீபமாக அதிகம் வெளிவர தொடங்கியிருக்கின்றன. அதிலும் தென்னிந்தியாவிலிருந்து வெளியான ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வட இந்தியாவிலும் பெரிய வெற்றி பெற்றன.

இதனையடுத்து தென்னிந்திய சினிமாக்கள், மொழிகள் குறித்தும் பாலிவுட்டைச் சேர்ந்த சிலர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. மேலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாலிவுட் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினர்.

இந்நிலையில் வடக்கையும், தெற்கையும் பிரிக்கக்கூடாது என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர் அங்கு பேட்டி ஒன்று கொடுத்தார்.

Kamal Haasan At Cannes

அப்போது இதுகுறித்து பேசிய அவர், “ எனது படம் சில ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது. நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னுடைய படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் படிக்க | கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட நடிகை நயன்தாரா

ரசிகர்கள் அலட்சியம் காட்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் எப்போதும் என்னை இந்தியனாகவே கருதுகிறேன்.

Kamal Haasan At Cannes

இந்தியாவில் எந்த இடத்திலும் என்னால் வாழ முடியும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அதுதான் அழகு. வடக்கிலும், தெற்கிலும் உள்ள அபராத் திறமைகளை நான் அறிவேன். அவற்றை பிரித்துப் பார்க்க கூடாது.

மேலும் படிக்க | மீண்டும் இணைகிறது ஜெய் பீம் கூட்டணி... இந்த முறை எந்த சம்பவம்?

இந்தியாவிலிருந்து தயாரிக்கும் திரைப்படங்கள் உலக அளவில் சென்றடைகின்றன. இந்தியத் திரைப்படங்கள் சர்வதேசப் படங்களாக மாறுவதற்கு நீண்ட காலம் கடந்துவிட்டது” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News