பத்திரிகையாளராக தனுஷ்! வெளியானது மாறன் படத்தின் ட்ரைலர்!

தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவான மாறன் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 28, 2022, 03:51 PM IST
  • டிவிட்டரின் புதிய வசதியை பயன்படுத்தி மாறன் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
  • இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பத்திரிகையாளராக தனுஷ்! வெளியானது மாறன் படத்தின் ட்ரைலர்! title=

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.  

maaran

மேலும் படிக்க | தனுஷிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பாரா ஐஸ்வர்யா?

டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம்,  நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.  இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம்  பிரத்யேகமாக வெளியாகிறது.

இப்படத்தில் பத்திரிகையாளராக தனுஷ் முதன் முதலில் நடித்துள்ளார்.  எப்போதும் உள்ளது போல இப்படத்திலும் மிகவும் இளமையாக, அழகாக உள்ளார் தனுஷ்.  முக்கிய பிரச்சனை ஒன்றை பத்திரிகையாளராக தனுஷ் எப்படி முடிக்கிறார் என்பது படத்தின் கதையாக இருக்கும் என்று ட்ரைலர் பார்த்த வரை தெரியவருகிறது.  இந்த ட்ரைலர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி உள்ளது.

maaran

மேலும் படிக்க | ஹிந்தியில் கொடி பறக்கவிடும் தனுஷ்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News