90'S கிட்ஸ்களின் வயிற்றெறிச்சலை கிளப்பிய 2K கிட்ஸ்! 19 வயசுல இதெல்லாம் தேவையா?

90ஸ் கிட்ஸ் பலரும் திருமணமாகாமல் சிங்கிளாக சுற்றி கொண்டிருக்கும் நிலையில் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் 2k கிட்ஸ்கள் பலரும் திருமணம் செய்து வருகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தான் இங்கே நிகழ்ந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Apr 12, 2023, 04:01 PM IST
  • 19 வயதாகும் மில்லியும் நடிகர் ஜாக் பான்ஜியோவும் காதல் பறவைகளாக வலம் வந்தனர்
  • தங்கள் குமுறல்களை சோசியல் மீடியாக்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.
90'S கிட்ஸ்களின் வயிற்றெறிச்சலை கிளப்பிய 2K கிட்ஸ்! 19 வயசுல இதெல்லாம் தேவையா? title=

Stranger things என்ற web seris மூலமாக பிரபலமானவர் மில்லி பாபி பிரவுன். 19 வயதாகும் மில்லியும் நடிகர் ஜாக் பான்ஜியோவும் காதல் பறவைகளாக வலம் வந்தனர். இன்ஸ்டாகிராமில் முதலில் நண்பர்களாக அறிமுகமான இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கையில் வைர மோதிரத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். விரைவில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் 90ஸ் கிட்ஸ் இந்த விஷயங்களை விரும்பவில்லை. தாங்களே சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும்போது 2கே கிட்ஸ் திருமணம் செய்து கொள்வதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் குமுறல்களை சோசியல் மீடியாக்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க |  தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் 8 புதிய படங்கள்! முழு விவரம்!

இதன் ஒரு பகுதியாக "she is 19" என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மில்லி 19 வயதில் திருமண நிச்சயதார்த்தமே செய்து விட்டாள், ஆனால் 25 வயது ஆகும் என்னை காபி குடிக்க கேட்டால் என் அம்மா என்னை அடிக்க வருகிறார். அதனால் நான் அவர் முன்பாக அழுது கொண்டிருக்கிறேன் என்று ஒரு 90s கிட்ஸ் ஒருவர் கூறியுள்ளார்.

அதே போன்று "she is 19 engaged ஆனால் நான் 15 வருஷமா RCB team ஐ பி எல் கப்பு ஜெயிக்கும் என நம்பி "Ee Sala cup namde" என்று சொல்லிட்டு இருக்கேன்" என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் RCB team வெறியரான 90s கிட்ஸ் ஒருவர். 

90’ஸ் கிட்ஸ் பலரும் பெண் தோழி கிடைக்காமல் தவிக்கும் போது, மில்லி பாபி மட்டும் எப்படி 19 வயதில் நிச்சயதார்த்தம் செய்யலாம் என நெட்டிசன்கள் கொதித்தாலும், உண்மை கசக்கத்தான் செய்யும் என 2கே கிட்ஸ் கிண்டல் செய்வதையும் தவிர்க்க முடியவில்லை. எப்படியோ நல்லா இருந்தா சரி தான்.

மேலும் படிக்க |  இதற்காகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விளக்கினேன் - காவ்யா அறிவுமணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News